மார்த்தாண்டம், செப். 8 –
மத்திய, மாநில அரசு மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள மீன்வள மசோதாவை கண்டித்தும் ஆழ்கடல் பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை திரும்ப பெற கேட்டும் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் முன்பாக குமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இணைச் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் எட்வின் அருள், துணைச் செயலாளர்கள் பிரங்கோ, புவனா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மைக்கேல் குமார், கோபாலகிருஷ்ணன், மேரி மசோ, மீகா, ஷிஜி, ஜெகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அனிஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெபிஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுபஜா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டிக்சன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கோபால ராஜா, கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் நோபள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ், விளவங்கோடு உறுப்பினர் சேர்க்கை அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் சஞ்சீவ், முஞ்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் அனீஸ் பிரிட்டோ, கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பிறனேஷ், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரியதர்ஷன், குழித்துறை நகர செயலாளர் அஜய் சிங், பைங்குளம் ஊராட்சி செயலாளர் ஜெனி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புதுக்கடை போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 181 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.



