திருப்பூர், ஜூலை 08 –
தென் நாடு மக்கள் கட்சி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வெள்ளியங்காடு நால்ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் தேவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனத் தலைவர் முகவை மாவீரன் கணேசன் தேவர் அவர்கள் கலந்து கொண்டு பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் அவிநாசி ரிதன்யா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளராக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றல் சின்னம்மா சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அண்ணா திமுகவில் இணைத்து களம் கண்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்.
மேலும் திருப்பூர் ரயில் நிலையம் முதல் பெருமாநல்லூர் வரை பறக்கும் பாலம், கருவலூர் அருகே உள்ள பெருமாள் கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரவேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் அரசியல் கட்சி தலையீடு இருக்கக்கூடாது எனவும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்களை காவலர்கள் குற்றவாளிகளை பிடிப்பது போல் பிடித்து வசூலிப்பதை தடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தொழிற்சங்க துணை தலைவர் மாரியப்ப தேவர், தலைமை கழகப் பேச்சாளர் கருப்புசாமி பாண்டியன் மாநகர மாவட்ட செயலாளர் சௌந்தரபாண்டி, தெற்கு மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் இளையராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு விஸ்வராயர், வடக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மேற்கு மண்டல தலைவர் காளிமுத்து தேவர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.