தென்காசி, ஜூன் 28 –
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தப்பாட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியானது ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.