ஈரோடு, ஆகஸ்ட் 12 –
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் தலைவர் ஈ.வி.கே. சண்முகம் தலைமையில் நடந்தது . மாவட்ட தலைவர் சோமு வரவேற்றார். இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், டிரைவர்கள், மேற்போர்வையாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பளம் பென்சன் வாரிசு வேலை வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியில்
கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் பணியின் போது இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய தலைவர் வேலுசாமி நன்றி கூறினார்.



