கோவை, ஆகஸ்ட் 15 –
காரமடை, டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரமடை ரயில் நிலைய வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா, நிர்வாக மேலாளர் திரு. மனோகரன், பள்ளியின் முதல்வர் திருமதி. சரஸ்வதி, பள்ளியின் செயலர் திரு. ஜெயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து பாதுகாப்போடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள், தேங்கியிருந்த குப்பைகள், முட்கள் மற்றும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, காரமடை வார்டு கவுன்சிலர்களான உஷா வெங்கடேஷ், மஞ்சுளா ராம்குட்டி, கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான உமாபிரியா மற்றும் அன்பரசன் ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



