தூத்துக்குடி, ஜூலை 10 –
மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் மேயர் ஜெகன் பெரிய சாமி.
இக்கூட்டத்தில் மொத்த 51 மனுக்கள் பெறப்பட்டன. உடன் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் , துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் , மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சட்ட சந்திரபோஸ், விஜயலட்சுமி, ஜான்(எ) சீனிவாசன், ராமர், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.