தூத்துக்குடி, செப்டம்பர் 17 –
தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரிய சாமி மலர் தூவி பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தென் பாகம் காவல் நிலையத்தில் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் மலர் தூவி பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் அனந்த சேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன் மற்றும் கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகி கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



