மார்த்தாண்டம், ஜூலை 25 –
திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட உண்ணியூர் கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் 23.07.2025 அன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து கைப்பேசி காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனாவிடம் திட்ட முகாம்கள் குறித்து பேசினார். நடைபெற்ற முகாமில் மனுக்கள் அளித்து உடனடி ஆணை பெற்ற பயனாளிகள் கைப்பேசி காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு பேரூராட்சிகள் துறை சார்பில் சொத்துவரி பெயர் மாற்றம், வருமான சான்றிதழ், வருவாய்த்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் புதிய குடும்ப அட்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, எரிசக்தி துறையின் சார்பில் மின்கட்டண பெயர் மாற்றத்திற்கான ஆணை, தோட்டகலைத்துறையின் சார்பில் பழத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கினார்.
நடைபெற்ற முகாமில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்ரவி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



