திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 30 –
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையினை நூலகரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சேகம் கணேசன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 2023-2024 சிறப்பு மூலதன மானிய திட்டத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இந்த நூலக கட்டிடத்தில் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூலக கட்டிடம் கடந்த 25 -ந் தேதி முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்படைப்பு ஆணையினை பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன் நூலகர் சசிகுமாரிடம் வழங்கினர்.
இதில் நகரச் செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் முருகன், ரகு (எ) அப்பு, சதாம் காதர் உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.