திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 30 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரூராட்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துதல் இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விவசாயம், சுற்றுசூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்திட மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழுமையாக பாடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.