திருவெண்ணெய்நல்லூர், ஜுலை 4 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மார் கிராமத்தில் ரூ. 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஓம் சிவசக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர் ஷீபாராணி, ஏழுமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேன்மொழி சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாலசுப்பிரமணியன் மற்றும் செவிலியர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.