அவிநாசி, ஜூன் 20 –
சாதா விசைத்தறித் தொழிலுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் 2022 ஒப்பந்தக் கூலியில் குறைத்து வழங்கி வரும் கூலியை உயர்த்தியும் கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான புதிய கூலி உயர்வைக் கேட்டும் ஒப்பந்தக் கூலியை குறைத்து வழங்காத வகையில் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்தித் தரக் கோரியும் முதல் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு ஏற்படாததால் சோமனூர், தெக்கலூர் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தும் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் சோமனூர் பகுதி மற்றும் சாமலாபுரம், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி கண்ணம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் அனைத்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தியும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் முன்னணியில் அறிவிப்பு செய்து மேற்படி கூலி உயர்வை 21-04-2025 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் N.M. முத்துச்சாமி தலைமையில் P. பொன்னுசாமி, தெக்கலூர்
பூபதி, ராமசாமி நடராஜ், வேலுச்சாமி சம்பத், கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன், ஆறுமுகம் அப்பகுதியின் தலைவர்கள் முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.