திருப்பூர், ஜூலை 21 –
திருப்பூர் மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் எண் 1 ல் உள்ள வார்டு எண் 1,11,12,13,14,15,24,25,26,27 ஆகிய வார்டுகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி ருபாய் 13 கோடியே 54 லட்சம் மதிப்பிட்டில் 184 சாலைகள் புதிய தார் சாலை பணிகள் துவக்க விழாவினை மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், மாநகர திமுக செயலாளர் தங்கராஜ், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், கொங்கணகிரி பகுதி பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், உதவி செயற்பொறியாளர் ஹரி, இளம் பொறியாளர் கணேஷ் எ. செந்தில் குமார், பிரபாகரன் மற்றும் மோகன்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ராமசாமி, செல்வராஜ், அனுசியா தேவி சண்முகசுந்தரம், சகுந்தலா ஈஸ்வரன், சாந்தி பாலசுப்பிரமணியம், தங்கராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்க தலைவர்கள் மற்றும் கூறும் முக்கியஸ்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.