திருப்பூர், செப்டம்பர் 25 –
திருப்பூர் மத்திய மாவட்ட கழக திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 43-வது திமுக வட்ட கழக அலுவலக வளாகத்தில் ஆள் உயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பின்பு 1,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், மாணவர் அணி திலகராஜ், கருவம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் மியாமி ஐயப்பன், வட்டக் கழக செயலாளர் பி.கே. கணேசன், பொறுப்பாளர் தம்பன் ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பல்லடம் சரவணன், இளைஞர் அணி நிர்வாகிகள் அசோக், சசிகுமார், மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் ஆனந்தி, அவைத்தலைவர் விஸ்வநாதன், கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், சிட்டிபாபு, தர்மராஜ், ஜின்னா பாய், செந்தில், சதீஸ், கண்ணன், காளீஸ்வரன், கோவிந்தராஜ், செந்தில், சிட்டி வடிவேல், கிங்பாய், சந்தோஷ், ரமேஷ், விக்னேஸ்வரன், பாக்கியராஜ், சகுந்தலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



