திருப்பூர், ஆகஸ்ட் 03 –
மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் அவர்களின் தலைமையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, கொங்குநகர் பகுதி கழகம், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் 10 ஆண்டுகால அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும், விடியா திமுக அரசு பதவி ஏற்ற இந்த 4.5 ஆண்டுகளில் பொதுமக்கள், விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி V. ஜெயராமன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான K.N. விஜயகுமார் முன்னிலை வகித்தார். கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் P.K.M.முத்து வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பட்டுலிங்கம், மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு,கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன், வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பு, சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ், புதிய பஸ்நிலையம் பகுதி கழகச் செயலாளர் கனகராஜ், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து,கருவம்பாளையம் பகுதி கழக சிவாளா தினேஷ் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் SPN. பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் ரத்தின குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி.புஷ்பலதா தங்கவேலன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி, உஷாரவி, நீதிராஜன், வார்டு கழக நிர்வாகிகள் அர்ஜுனன், நாச்சிமுத்து, மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் தேவராஜ், மாவட்ட மாணவரணி இணை செயலாளர். ஹரிபிரசாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மோகன் மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.