திருப்பூர், ஆகஸ்ட் 23 –
திருப்பூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் அடுத்த மாதம் திருப்பூருக்கு வருகை தர இருக்கிறார். அதனை முன்னிட்டு நிர்வாகிகள் தங்களுக்கு உரித்தான பாணியில் பணி செய்து அவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான வேல் குமார் சாமிநாதன் அவர்கள் கடந்த பொதுக்கூட்டத்திற்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நாற்காலிகளை வழங்கி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
அதற்கும் ஒரு படி மேலே போய் தற்போது பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுமார் 135 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் அமைப்பதற்கான வாஸ்து பூஜை நடத்தி அதற்கான முழு செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். மதிப்பு மட்டும் 15 லட்சத்திற்கும் மேலே வரும் என்கின்றனர் ஒப்பந்ததாரர். இந்த நிகழ்வின் போது முன்னாள் ஊராட்சி பெருந்தலைவர் தங்கராஜ், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மேக்னம் பழனிச்சாமி, பொன்னுலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி மற்றும் வீதி கார்டு கிளைக் கழக அதிமுக செயலாளர் சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்திரசேகர், ஜன பிரகாஷ் ராசப்பன், மூர்த்தி அருண்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.



