திருப்பூர், செப்டம்பர் 06 –
திருப்பூரில் காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன்.
காவலர்களின் உன்னதத்தை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 6-ம் தேதி காவல் துறையினருக்கு முக்கிய நாளாகும். இந்நிலையில் காவலர் தினத்தை இந்த ஆண்டு முதல் தமிழக அரசு, ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதியை காவலர் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் காவல்துறையின் அர்ப்பணிப்பையும், சமூக பாதுகாப்பில் அவர்களின் பங்கையும் பொதுமக்கள் நினைவுகூரும் விதமாக திருப்பூர் மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. மேலும் காவலர்களின் குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, மியூசிக்கல் சேர் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியானது காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர துணை ஆணையர் பிரவீன் கௌதம், உதவி ஆணையர்கள் மற்றும் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



