திருப்பூர், ஆகஸ்ட் 07 –
உலக தாய்ப்பால் வார விழாவில் நிறைவு நாளை முன்னிட்டு இன்னர் வீல் கிளப் ஆப் திருப்பூர் மற்றும் கிட்ஸ் கிளப் பள்ளி குழுமம் இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களை கொண்டாடும் விதமாக பச்சிளம் குழந்தைகளின் நலம் பேணுதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்தை எடுத்துரைக்கும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி செவிலியர் களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு புத்தாடை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தினை இன்னர் வீல் கிளப் ஆப் திருப்பூர் தலைவி வினோதினி கார்த்திக் தாய்மார்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் கேலக்ஸி, இன்னர் வீல் கிளப் ஆப் விக்டரி நிர்வாகிகளும் மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்கள், தாய்மார்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.