திருப்பூர், செப். 17 –
திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆணையும், 1 பயனாளிக்கு விதவைச் சான்று, 2 பயனாளிகளுக்கு சாதிச் சான்று, 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினையும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுபத்ரா தேவி ஆனந்தன், சாந்தாமணி முருகர் சாமி, சாந்தி அய்யாசாமி, ஆண்டிபாளையம் பகுதி செயலாளர் முருகசாமி, வட்டாட்சியாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



