திருப்பூர், செப்டம்பர் 15 –
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட மாநகராட்சி 12, 24, 25 வார்டுகளுக்கு சிறுபூலுபட்டி பகுதி கழகச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் தலைமையில் கழகத்தின் சார்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, வேலம்பாளையம் வி.கே.பி. மணி, வார்டு செயலாளர்கள் ஆறுமுகம், கார்த்தி, மாணிக்கம், ரவி மற்றும் சார்பு அணி கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 250க்கும் மேற்பட்டோர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.



