திருப்பரங்குன்றம், ஜூலை 11 –
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னேற்பாடு நிகழ்ச்சியாக கோவில் தேவ சேனா மண்டபத்தில் உள்ள யாகசாலை பூஜைகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, அறநிலையத் துறை துணை ஆணையர், காவல் ஆணையர் லோகநாதன், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள், சிறப்பு பேருந்துகள், வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர், சுகாதார வசதி, அவசர கால ஆம்புலன்ஸ் வசதிகள் ஆகிய பல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்.