திருப்பத்தூர், ஆக. 5 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலம் அடுத்த நாக குட்டை கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருவிழாவில் பெண்கள், குழந்தைகள், பக்தர்கள் என பலரும் பூஜை செய்து வழிபட்டனர். ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
இந்த ஆலயத்திற்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவினை சிவனடியார் சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



