திருப்பத்தூர், செப். 17 –
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சின்னமதார் தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆணை, 1 பயனாளிக்கு விதவைச் சான்று, 2 பயனாளிகளுக்கு சாதிச் சான்று, 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினையும், 1 பயனாளிக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி வழங்கினார். உடன் திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் க. சங்கீதா வெங்கடேஷ், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி, திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதன், வட்ட வழங்கல் அலுவலர் முரளி, 21, 22, 24 வார்டு கவுன்சிலர்கள் சுதாகர், சில்தார் பேகம் சான், லட்சுமி வாசுதேவன், உள்ளாட்சி மற்றும் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



