கோவை, செப். 01 –
திருப்பூர் வடக்கு மாவட்டம், அன்னூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தின் சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். அன்னூர் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ந.பழனிச்சாமி, தெற்கு மு. தனபாலன் மற்றும் பேரூர் கழக செயலாளர் இரா. பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி கலந்து கொண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது டாக்டர் கலைஞர் ஆட்சியில் புரிந்த திட்டங்களையும் தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்திய செயல்பாட்டு திட்டங்களையும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் நாக நந்தினி கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துவக்க உரையாற்றினார்கள். கூட்டத்தில் உடன் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அம்பாள் நந்தகுமார், கோவை மாவட்ட துணை செயலாளர் எம்.என்.கே. செந்தில், நகரப் பொருளாளர் ஹரிசங்கர், பி.ஜி.பி. பிரேம் தேவா, மாவட்ட ஒன்றிய நகர திமுகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



