By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை

Last updated: May 16, 2024 10:24 am
May 16, 2024
121 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 16

குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தர்மத்தை காக்க, அதர்மத்தை அளிக்க எம்.ஜி.ஆரால் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேராதரவுடன் எழுச்சியுடன் தொடங்கப்பட்டது. இந்த பேரியக்கத்தை ஜெயலலிதா பாதுகாத்தார். தொடர்ந்து எடப்பாடியார் தலைமையில் கழகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்களே தவிர வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இந்த இயக்கத்தை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிவாளி என நினைத்து அழிவு பாதைக்கு வழி வகுத்து கொண்டிருக்கிறார் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, யார்? இந்த ரகுபதி என்றால் அ.தி.மு.க-வால் வளர்ந்தவர், அடையாளம் காட்டப்பட்டவர். வாழ்க்கையில் சொத்துக்களை வாரி குவித்தவர். அவர் தனது வளர்ச்சிக்காக சொத்துக்களை சேர்ப்பதற்காக, சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியினை பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்தின் போது இவற்றை எல்லாம் பாதுகாக்க அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தவர் ஆவார். தற்போது தனது வளர்ச்சிக்கு காரணமான அ.தி.மு.க-வை மறந்து வாய்க்கு வந்தபடி வசைபாடி வருகிறார். ரகுபதியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போமானால், புதுக்கோட்டையில் 1991-ம் ஆண்டுக்கு முன்னர் எப்படி இருந்தார். அவரது சொத்து மதிப்பு என்ன என்பது நாடறிந்த உண்மை. இது அந்த மாவட்ட மக்கள் அனைவருக்குமே தெரியும். அந்த அளவுக்கு பொருளாதார அளவில் வீழ்ச்சியில் இருந்தார். 1991-1996-ம் ஆண்டில் அம்மா ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டிற்கு பிறகு முதலாவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், அதனையடுத்து வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் அமைச்சராக இருந்த போது அம்மா பெயரில் ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியினை தொடங்கினார். இது நாடறிந்த உண்மை. 1996-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக இடைத்தேர்தல் வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பயந்து தி.மு.க-வை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒழிந்தவர்தான் இந்த ரகுபதி தி.மு.க ஆட்சி காலத்தில் அன்றைய முதலமைச்சர் மறைந்த கருணாநிதி இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துவிட்டார் என லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. சென்னைக்கு அருகில் மருத்துவக் கல்லூரியினையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளையும் தனது குடும்ப உறுப்பினர்களான மகன், மகள் பெயரில் தொடங்கினார் என்ற கணக்கின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவர் அ.தி.மு.க-வை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர். தி.மு.க-வில் தற்போதைய உட்கட்சி பூசலை மூடி மறைப்பதற்கும், முதலமைச்சரை திருப்தி படுத்துவதற்கும் அ.தி.மு.க-வை பற்றி அவதூராக பேசி வருகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை பார்க்கையில் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கும், சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும், கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கும் அ.தி.மு.க-வை இவர் பயன்படுத்தி கொண்டார். இன்று இவற்றை எல்லாம் மறந்து போலித்தனமாக, மனசாட்சிக்கு விரோதமாக, நீதிக்கு முரணாக பேசி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை நிர்வகிக்கும் அமைச்சர் பதவியை ரகுபதிக்கு கொடுத்துள்ளார். இது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தப்பிக்க, சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மகன், மகள் பெயரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களை தொடர்ந்து பாதுகாக்க, அ.தி.மு.க-விற்கு துரோகம் செய்த இவர் இறைவனால் தண்டிக்கப்படுவார். முதலமைச்சரை திருப்தி படுத்துவதற்கு பொய்யான தகல்களை கூறி முகத்தில் கரியை பூசிக் கொள்கிறார். பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் திசைமாறும் கூட்டங்கள் விரைவில் காணாமல் போய்விடும். என தளவாய்சுந்தரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊரணியை தூர்வாரும் பணி
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

March 10, 2025
35 Views
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
“மோந்தா” புயல் காரணமாக பெங்களூரு- நாகர்கோவில் ரயில் ரத்து
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினம்; அதிமுக சார்பில் மரியாதை
குலசேகரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account