திண்டுக்கல், ஜூலை 4 –
திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985 ஆறு வகுப்பில் சி பிரிவு முதல் 12 வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் பார்சன் கோர்ட் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நண்பர்களை சந்தித்து கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் தங்கள் மகழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ஆசிரியர்களிடம் கெஞ்சி பிரம்படியை வாங்கியும், நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கு டாக்டர். திருலோகசுந்தர் தலைமை தாங்கினார். ஆண்டியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, மாநில பிஆர்ஓ G.வெங்கடேஸ்வரன், இளங்கோ, துளசி ராமன், பாண்டவ ராஜா, மாரிமுத்து, அழகப்பன், பாஸ்கர், அய்யாதுரை, அறிவழகன், சதீஷ், சன்னாசி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் 40 பேர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.