திண்டுக்கல், அக்டோபர் 10 –
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5,478 பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பெ. செந்தில்குமார், சா. காந்தி ராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெ. திலகவதி, உதவி ஆட்சியர் ( பயிற்சி) மரு.ச. வினோதினி பார்த்திபன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.



