திண்டுக்கல், செப். 26:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரப் பகுதியில் தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கல்லூரி மாணவியர்களுடன் பங்கேற்று தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், மாநகர நகர்நல அலுவலர் முருகானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



