நாகர்கோவில், ஜூலை 8 –
தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) கடந்த மாதம் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயணிகள் நலன் கருதி அந்த சிறப்பு ரயில் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் நேற்றும், வரும் 14-ம் தேதியும் திங்கள்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து 3:30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு காலை 5.15 மணிக்கு வந்து சேரும். மறு மார்க்கமாக நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 13-ம் தேதி இதே மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.