தருமபுரி, ஜூலை 29 –
தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகில் சங்கத் தலைவர் பி. அழகு முத்து தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சிறப்பு மாவட்ட நீதிமன்றம் (SDJ) மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்றம் (SSJ) ஆகிய நீதிமன்றங்களை இடம் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த ROC NO.56-A /2015/D2-ஐ உத்தரவை ரத்து செய்து மேற்படி நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இயங்கிட வலியுறுத்தியும் போக்கோ நீதிமன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றங்களை வேறு கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யும் உத்தரவினை ரத்து செய்ய வலியுறுத்தியும், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் பழுதடைந்துள்ள பஞ்சாயத்து சாலையை தரம் உயர்த்தி இரு வழி சாலையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சங்க செயலாளர் கே. சரவணன், பொருளாளர் எ. கார்த்திகேயன், மூத்த வழக்கறிஞர்கள் டி. ராஜாங்கம், ஜி. விமலன், எஸ். செல்வராஜ், பி. மாதேஷ், எம். மன்னார் மன்னன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.