தருமபுரி, ஜூலை 26 –
தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் N. சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவசக்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். செல்வம் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திமுக அரசின் 2021 சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதி எண் 309 -ன் படி CPS- ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அழுல்படுத்த கோரியும் CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரி வலியுறுத்தி பேசினார்கள். சி.ஆர். மஞ்சுநாத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி, பி. துரைராஜ் மாவட்ட தலைவர், பி. கருப்பண்ணன் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர், எம். ஜி. தேவேந்திரன், ஆர். மாது மாவட்ட தலைவர், டி. ராஜேஸ்வரி மாவட்ட தலைவர், அரசு ஊழியர்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.