தருமபுரி, ஜூலை 22 –
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தின் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சரவணன், தொகுதி பொறுப்பாளர் முனிராஜ் உள்பட இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாரத ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. மேலும் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பி.கே. சிவா, பாலக்கோடு நகர செயலாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் நன்றி கூறினார்.