தருமபுரி, அக்டோபர் 11 –
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வலுவான ஆதரவுடன் தமிழ்நாடு தன்னார்வ ரன்கள் அமைப்பின் ஒத்துழைப்புடன் 2024 -ஆம் ஆண்டு பனை விதை நடவு இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இதன் மூலம் மாநில முழுவதும் 38 மாவட்டங்களிலும், மொத்தம் 44 லட்சத்து 90 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்து உதவி செயலி மூலம் புவியியல் அடையாளத்துடன் பதிவேற்றியது.
இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வளர்கள் இணைந்து 2025- ஆம் ஆண்டு பனை விதை நடவு இயக்கத்தை உலக ஓசேன் தினம் அன்று தொடங்கி வருகின்ற 15-ஆம் தேதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளன்று பனை விதைகள் நடவு நிறைவு பெற இருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஆறு கோடி பனை விதைகள் நீர்நிலைகள், கடலோரப் பகுதிகள், காலியாக உள்ள நிலப்பரப்புகள் மற்றும் பனை காடுகள் உருவாக்கும் நோக்கில் நடப்படுகிறது. நாம் அனைவரும் இணைந்து 2025 பனை விதை நடவு இயக்கத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வரலாற்று சின்னமாக ஆக்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.


