தருமபுரி, ஆக 4 –
தருமபுரி மாவட்டம் மிட்டா நூலஅள்ளி அடுத்த மட்டிக்கான் தோப்பில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ வீர மணிகட்டி ஆஞ்சிநேயர், சஞ்சி வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றுடன் தொடங்கியது.
ஆடி 18-யை முன்னிட்டு வனத்திலிருந்து பூக்கரகம், பால்குடம், அபிஷேக பொருட்கள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக ஆஞ்சநேயர் கோயிலை வந்து அடைந்தனர். இதே தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் பூசாரி சின்னசாமி அனுமான் வேடமடைந்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறினார். கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.