தருமபுரி, செப்டம்பர் 29 –
தருமபுரியில் அபாபில் சமுதாய நல சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் அபாபில் சமுதாய நல சங்கம் பொருளாளர் டி.ஏ. ழுனவர் தலைமையில் டேக் கிஸ் பேட்டையில் உள்ள மஸ்ஜுதே ரஹமத் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. அபாபில் சமுதாய நல சங்கம் தலைவர் டி. ஏ. அஸ்கர் வரவேற்றார். டி. கே. பாபு செயலாளர், ரோஷன் முன்னா, பஜல் கரிம், தீபக் குமார், ஆயிஷா, ஐ. எஸ். பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மது மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.
புற்றுநோய், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், ரத்த வாந்தி, கல்லீரல் செயலிழப்பு, கணைய பாதிப்பு, மாரடைப்பு அபாயம், ரத்த கொதிப்பு, சிறுமூளை பாதிப்பு ஆகியவை மதுவால் ஏற்படும் பாதிப்புகள். இரத்த அழுத்தம் அதிகரித்தல், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், வலிப்பு நோய், அதிக கை நடுக்கம், பக்கவாதம், இதயத்துடிப்பு அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பினால் சுவாசக் கோளாறு ஆகியவை கஞ்சாவினால் ஏற்படும் பாதிப்புகள்.
இந்த நிகழ்ச்சியில் அப்சர் லியாகத், அலி சையத் பிலால், மோகன் குமார், காதர் ஷெரிப், பைசல்பாஷாஹெரிப் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நன்றி உரை சையத் கலிம் செயலாளர் அபாபில் சமுதாய நல சங்கம்.



