சென்னை, ஜூலை 22 –
தமிழ் நில ரெட்டி குல மன்னர்கள் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு ரெட்டி ஜனசங்கம் தலைவர் இரா. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன், திருச்சி வேலுச்சாமி, நீதியரசர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ரெட்டிகுல வரலாற்று ஆராய்ச்சி மையம் நிறுவனர் தலைமை ஆய்வாளரும், இந்நூலின் ஆசிரியருமான தம்பு சி. கிருஷ்ணசாமி நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் வீராட்சி, மின்னல் டாக்டர் மு. ஸ்ரீகாந்த், ஜி. ஹர்ஷவர்தன், எல்ஐசி வி. ரவிச்சந்திரன், நெல்லை டாக்டர் எஸ். வெங்கடேஷ்பாபு, பொள்ளாச்சி பொன்னுசாமி, ஆர். பூங்குன்றன், டி.எஸ். கந்தசாமி, ஆர்.வி. செல்வகுமார், ஏ. குணசேகரன், மின்னல் பிரபு மற்றும் ரெட்டியார் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.