கிருஷ்ணகிரி, மே 11 –
தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார். தமிழகத்தில் 14 வது முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதையடுத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தவெக கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணம் ஒன்றியம் மிட்டஹள்ளி அருகே உள்ள தாசம்பட்டி கூட்டு ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் மிட்ட ஹள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான
எல்.சுப்பிரமணியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை சுப்பிரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், தவெக கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



