திருப்பூர், ஜூலை 23 –
தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவையின் மாநில தலைவர் பசும்பொன் பாலு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்கள். அதில் கூறி இருப்பது என்னவென்றால், கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் 55 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்வதை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் எங்களின் முன்னோர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டும் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் 16 உயிர்களைக் கொடுத்தும் பல்வேறு தியாகங்களை செய்தும் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை சேமித்து அதன் மூலம் கள்ளர் பொது நிதி என்று அந்த காலத்திலேயே கள்ளர்களுக்கு நிதியை உருவாக்கியும் மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் இருக்கும் கள்ளர் பள்ளிகளுக்கு கள்ளர் இன மக்கள் இடமும் கொடுத்து கள்ளர் இன மக்களால் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட பள்ளிகளுக்கு கள்ளர் பள்ளி என பெயர் வைத்து அந்த பள்ளியில் கள்ளர்கள் மட்டுமல்லாது அந்தப் பகுதியை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் குழந்தைகளும் பயன் பெற்று இன்று வரை நல்ல முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனவே தமிழக அரசு கள்ளர் பள்ளிகளுக்கு எதிராக பிறப்பித்துள்ள அரசாணை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் கள்ளர்களின் தனித்துவமான அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் வீரம் செறிந்த வரலாற்றையும் அளித்திட மற்றும் மறைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு கள்ளர் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு அந்த பெயரினை நீக்க விட்டு அதற்கு சமூக நீதி விடுதி என மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெயர் மாற்றுவதை நிறுத்திவிட்டு கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 120க்கும் மேற்பட்ட சமையலர் பணியிடங்களையும் 40க்கு மேற்பட்ட காவலர் காலிப் பணியிடங்களையும் காலிப் பணிகளாக உள்ள 84 இடைநிலை ஆசிரியர்கள் 94 பட்டதாரி ஆசிரியர்கள் 30க்கும் மேற்பட்ட முதுநிலை 20-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கள்ளர் பள்ளி அனைத்து தரப்பு மக்களின் படிப்பை நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்திருந்தனர். முன்னதாக இந்த மனு வழங்குவதற்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மருது பாண்டிய சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி வேடமணிந்து குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.