ராமநாதபுரம், ஜுலை 14 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமூக நீதி மாணவர் அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டி பேரூர் தலைவர் சையது அப்துல் காதர் தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஹம்மாது, செயலாளர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பரக்கத் அலி, துணைத் தலைவர் அலாவுதீன் , pv பட்டனம் அப்துல்லா சலீம் முஸ்தபா பரித், சித்திக், அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு நடத்திய பேச்சுப் போட்டியில் தொண்டி அமீர் சுல்தான் அகடாமி மாணவர் முகம்மது ஜவகர்தீன் முதலிடம் பெற்றார். அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சனா இரண்டாம் இடம் பெற்றார். இந்த இரண்டு மாணவ மாணவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பாராட்டி பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார்.
மேலும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு இடையான விளையாட்டு போட்டியில் இறகு பந்து விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற முஸ்பிரா பானு ஆகிய மூன்று மாணவ மாணவிகள் சாதனையை பாராட்டி தொண்டி தமுமுக அலுவலகத்தில் சால்வை அணிவித்து சீல்டு நினைவுபரிசு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினர். ரிஸ்வான் நன்றி கூறினார்.