தருமபுரி, ஜூலை 12 –
தருமபுரியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தும்பாராவ் வரவேற்றார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஊர்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும். ஊர்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் அசோக் குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மாணிக்கம், மணி ஆகியோர் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து இந்த ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூட்டத்தில் பேசினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நூலகர்கள் அனைவரும் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டு தமிழக முதல்வர், பொது நூலக இயக்குனர், மாவட்ட நூலக அலுவலர் ஆகியோருக்கு தீர்மான மனுவை அனுப்பி வைத்தனர்.