மதுரை, செப். 17 –
மதுரை அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில்
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்து மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சகவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 660 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க செய்து இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 53 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட உருவாக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்கள் ஒதுக்கியதில்
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு இடங்கள் கூட கூடுதலாக பெற முடியாத கையாளகாத ஸ்டாலின் அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வியாக உள்ளது.
என்பதே சான்று.
மேலும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அடிப்படையில் 500 மருத்துவ இடங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் தேசிய தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளை முறையாக கட்டமைப்பு செய்யவில்லை என்பது தான் குற்றச்சாட்டாக தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழகத்தில 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அவர்களால் 100 நாள் வேலை வாய்ப்பு சம்பளத்தை கூட பெற்றுத்தர முடிவில்லை. ஆனால் எடப்பாடியார் தான் மத்திய அரசிடம் வலியுறுத்தி 2,999 கோடியை பெற்றுத் தந்துள்ளார், தற்போது இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவ இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. இது தமிழக மக்களுக்கு செய்த துரோகமாகும்.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். நிச்சயம் மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு கூடுதல் இடங்களை பெற்று தருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.


