திண்டுக்கல், ஆகஸ்ட் 25 –
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்.பி. செல்வராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடி முருகன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் விமல்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அதைத் தொடர்ந்து பேசிய தலைவர் மழை காலம் தொடங்க உள்ளதால் கால்வாய்கள், சுகாதாரமான குடிநீர் மற்றும் தெருவிளக்குகளை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கவிதா ராஜங்கம், கருணாகரன், முகமது நசீர், மீனாட்சி, காசியம்மாள், செல்வி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை எழுத்தர் விவேக் நன்றி கூறினார்.



