திருப்பூர், ஜூலை 3 –
அன்புமணி ராமதாஸ் தலைமையில் மேகதாது அணை தடுப்போம் காவிரி காப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று 3-வது நாள் திருப்பூரில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வந்துள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கர்நாடகாவில் காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என 4 நாள் நடைபயணம் 3 வது நாள் இன்று. தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும். 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர். மதுரையில் வைகை வந்தாலும் அத்தனை மாவட்டங்களும் காவிரி நீரைத் தான் அருந்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநிலத்தில் அவர்களுக்கு தேவையானதை செய்து கொள்கிறார்கள்.
ஒரு முறை கூட கர்நாடகா அரசு ஒப்பந்தத்தை செயல்படுத்தியது கிடையாது. மேகதாது கட்டும் முன்பே தண்ணீர் தராத நிலையில் மேகதாது கட்டப்பட்டால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. அனைவரும் பாதிப்படையும் பிரச்சினை என்பதால் பொதுமக்கள் இளைஞர்கள் வந்து அழுத்தம் கொடுத்தால் தான் மாநில அரசு கவனம் கொள்கிறது. மத்திய அரசு கவனம் செலுத்தும் மத்திய அரசு கர்நாடகா விற்கு தான் சாதகமாக வருவார்கள். அதே போல் கர்நாடகாவில் 2028ல் தேர்தல் வர உள்ளதால் அடுத்த ஒன்றரை ஆண்டு சிவக்குமார் இன்னும் அதிகமாக சத்தம் போடுவார். அங்கு அனைத்து கட்சிகளும் கூடிய பேசி வருகிறார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் இங்கு அது போல நடக்காது. வனத்தை அழித்தால் தான் இந்த அணையை கட்ட முடியும்.
சமூக ஆர்வலர்கள் இதனை எதிர்க்கிறார்கள்.
சட்டமன்றத்தில் மேகதாது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானம் திருத்தம் கொண்டு வந்தது ஏற்புடையது அல்ல. அணை கட்டவே எதிர்ப்பு தீர்மானத்தில் மேகதாது நடுவர் தீர்மானம் என்பது முரணானது. இது 100 சதவீதம் பாசனத்திற்கு தான். மேகதாது நடுவர் மன்றம் அமைத்தால் கர்நாடகாவிற்கு சாதகமான முறையில் தான் அமையும். எனவே இந்த தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும். எதற்கும் வழி விடக்கூடாது. இதனை பயன்படுத்தி கர்நாடகா மேகதாது நடுவர் ஆணையம் அமைத்தால் நமக்கு தான் பாதிப்பு.
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை. அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நிபுணத்துவ வழக்கறிஞர்களை வைத்து வழக்கு தொடர வேண்டும். காடுகளை வளர்ப்பதற்கு விரிவுபடுத்த இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதற்கு எதிரானது இந்த அணை கட்டுவது அதனை கொண்டு வழக்கு தொடரலாம் . 2033 வரை இங்கு வரக்கூடாது . அதுவரை 175 டி.எம்.சி தண்ணீர் பகிர்வு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த மேகதாது அணை பிரச்சனையை தேர்தலுக்காக கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இதனை தேர்தல் பிரச்சினையாக பார்க்க கூடாது. காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழக அனுமதி இல்லாமல் டிபிஆர் கூட தயார் செய்யக்கூடாது ஆனால் இப்போது அனைத்தும் நடக்கிறது. இது முரணான குழப்பமான சூழ்நிலை உள்ளது.
1974ல் கர்நாடகாவில் காவிரி பாசன 6.8 லட்சம் ஏக்கர், 1991 ல் 12 லஞ்சமாக உயர்ந்துள்ளது 2016ல் 21 லட்சமாக உயர்ந்துள்ளது. 1974 ல் தமிழ்நாட்டில் 29 லட்சம் ஏக்கர் இன்று 20 லட்சமாக குறைந்துள்ளது. மேகதாது கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் 10 லட்சம் ஏக்கராக குறையும். 60 விழுக்காடு உணவு காவிரிப் படுகையில் தான் விளைகிறது என தெரிவித்தார்.



