நாகர்கோவில் மே 9
தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10:30 மணிக்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள கீழ கருப்பு கோட்டையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினருமான வேலாயுதம் காலமான நிலையில் பாஜகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேலாயுதம். தேசிய கட்சியாக பாஜக தேசிய மிகப்பெரிய அளவில் வளர்ந்தாலும் தமிழகத்தில் காலூன்றாத நிலையில் அந்த கட்சிக்கு என அரசு முத்திரை பதித்த லெட்டர்பேட்டை பெற்று தந்தவர் வேலாயுதம். 1996 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அதுதான் தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த நிகழ்வாக அமைந்தது. இதனையடுத்து தேசிய அளவில் பேசு பொருளானார் வேலாயுதம். தேசிய தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. தொடர்ந்து அரசியலில் பிஸியாக இருந்த அவர் காலப்போக்கில் அரசியலில் இருந்து விலகினார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார் இதன் இடத்தில் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேலாயுதம் மறைவு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics