தஞ்சாவூர், ஜூலை 19 –
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி பள்ளியை தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுப்பில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பள்ளி வசதிகளை நேரடியாக ஆய்வு செய்தும் அதன் அடிப்படையில் தஞ்சாவூர் அடுத்துள்ள காசவளநாடு புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய கணினி தேவை என்ற கோரிக்கையை ஏற்று கல்வி வளர்ச்சி நாளில் அதை நிறைவேற்றி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ஒன்றிய கழக செயலாளர் அருளானந்தசாமி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.