தஞ்சாவூர், அக்டோபர் 4 –
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 38 அணிகள் பங்கேற்பு உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். 2025- 26 ஆம் ஆண்டு முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு ப் போட்டி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்கள் . மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதன் படி மாவட்டத்தில் அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கால்பந்து போட்டியில் பங்கேற்க மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில அளவிலான மாணவர் களுக்கான கால்பந்து போட்டி தொடங்கியது .மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த போட்டிகளில் 38 மாவட்டங் களில் இருந்து வந்திருந்த கால்பந்து அணிகளை சேர்ந்த மொத்தம் 684 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி வருகின்ற 7 தேதி வரை நடைபெறு கிறது .இப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இடம் பெறும் அணி க்கு முதல் பரிசாக ரூபாய் 75,000ம், இரண்டாவது பரிசாக ரூபாய் 50,000 ம், மூன்றாவது பரிசாக ரூபாய் 25,000 ம் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒலிம்பியன் கால்பந்து வீரர் சைமன் சுந்தர்ராஜன், முரசொலி எம்பி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



