தஞ்சாவூர், ஆகஸ்ட் 8 –
தஞ்சாவூரில் திருவையாறு பாரதி இயக்கத்தின் பாரதி இலக்கிய பயிலகம், பாரதி பவுண்டேஷன் சார்பில் தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாரதி இலக்கிய பயிலக இயக்குனர் மேனாள் பேராசிரியர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். பேராசிரியர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். திருவையாறு இளையோர் திறன் வளர் மைய இயக்குனர் குப்பு வீரமணி விருதாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
விழாவில் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான சுப்பராயனுக்கு தமிழ் மூதறிஞர் சேக்கிழார் அடி பொடி ராமச்சந்திரன் நினைவு விருதும், காந்திய சிந்தனையாளர் புதுக்கோட்டை ஆரோக்கியசாமிக்கு வழக்கறிஞர் இராமலிங்கம் நினைவு விருதும், கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான விசுவநாதனுக்கு தஞ்சை கோபாலன் நினைவு விருதும் வழங்கப்பட்டது.
விருதுகளை திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தர் பஞ்சநதம் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக பாரதி பவுண்டேஷன் அறங்காவலர் பிரேமசாயி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக காவிரி பாரம்பரிய மைய இயக்குனர் சாமி சம்பத் குமார் நன்றி கூறினார்.