தஞ்சாவூர், செப்டம்பர் 1 –
தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சாவூர் மத்திய மாவட்ட நகர கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் 24-ம் ஆண்டு நினைவு தினம் மாநகர தலைவர் எம். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஜி.கே. மூப்பனார் திரு உருவ படத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.பி.எஸ்.வி. கெளதமன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிவ முரளிதரன், துனை செயலாளர் ஏ. ராம் மோகன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஸ்டீபன் ஆரோக்கியராஜ், மாவட்ட பொது செயலாளர் கோவி. மோகன், மாவட்ட செயலாளர்கள் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஜெயகுமார், கே. உலகநாதன், எஸ். மரிய பிரகாசம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெகதீஷ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி, கோட்ட தலைவர் காசிநாதன், வட்டார தலைவர்கள் அய்யாறு, ஜான் அலெக்ஸ், மாநகர நிர்வாகிகள் ராஜவேல், சாம்பசிவம், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். மகர்நோம்புசாவடி பாரத மாதா முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.



