தஞ்சாவூர், ஆகஸ்ட் 8 –
தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 7 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சாவூர் மத்திய மாவட்டம், மாநகரம், திமுகவின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசலில் இருந்து திமுகவினர் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தலைமையில் மாநகர செயலாளாரும், மேயருமான சண். ராமநாதன் முன்னிலையில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவசிலைக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், மாவட்ட அமைத்தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி,
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.