தக்கலை, ஆக. 22 –
குமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 23.08.2025 அன்று தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் முளகுமூடு, வாள்வச்சகோஷ்டம், கப்பியறை, திருவிதாங்கோடு உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களும், மருதூர்குறிச்சி, திக்கணங்கோடு, ஆத்திவிளை உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட மக்களும் மற்றும் கல்குளம் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.


